
மன அழுத்ததுக்கு மாத்திரை எடுத்தால் கரு உருவாவதை தடுக்குமா?
வணக்கம் நான் டாக்டர் கோமதி. கோயம்புத்தூர்ல இருந்து பேசுறேன். நம்பளோட வீடியோவுக்கு கமென்ட் வந்திருந்தது. ஒரு லேடி எழுதி இருந்தாங்க. மன அழுத்தத்திற்கு மாத்திரை எடுத்தால் கரு உருவாவதை தடுக்குமா ?
சாதாரணமா கரு உருவாவதற்கு ஆரோக்கியமான கருமுட்டை வேண்டும். ஆரோக்கியமான உடலுறவு வேணும், கர்ப்பப்பையும், உடலில் உள்ள ஹார்மோன்கள், ஈஸ்ட்ரோஜன் ப்ராஜெக்ட்ராஜன், தைராய்டு இந்த மாதிரியான முக்கியமான ஹார்மோன்ஸ் ஆரோக்கியமாய் இயங்கணும். இந்த மாதிரி இருந்ததுன்னா கரெக்டா கருமுட்டை மாதம் ஒரு முறை வர வேண்டிய டைம் க்கு வெடிச்சு வந்ததுனா, அந்த நேரத்துல ஆணும் பெண்ணும் சேர்ந்து உடலுறவில் ஈடுபடும் பொழுது கட்டாயமாக்க கரு ஆகும்.
நீங்க எதற்காக ஒரு மாத்திரை எடுத்தாலும் சரி, இப்ப நிறைய பேருக்கு சின்ன வயதில் இருந்து ரெகுலரா தினமும் தைராய்டு மாத்திரை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கு. அந்த மருத்துவர் சொல்றபடி இது உங்களுடைய வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டிய ஒரு மாத்திரை. தைராய்டு டெஸ்ட் பண்ணிட்டு நல்லா இருக்கு அப்டின்னு நெறைய பேரு நிப்பாட்டிட்டீங்க. அதுவும் இந்த திருமணமான பின்னர் மாத்திர சாப்பிடுறது நிப்பாட்டினா நமக்கு நல்லது அப்டிங்குற மாதிரி நினைச்சுட்டு நிறுத்தும் பொழுது உங்களுடைய ஹார்மோன் அளவு நிறைய மாறிடும்.
அப்போ உங்களோட ஈஸ்ட்ரோஜன் ப்ராஜெஸ்ட்ரான் இந்த மாதிரி கரு உருவாவதற்கான ஹார்மோன்கள் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கு. அதனால எந்த மாத்திரை நீங்க எடுத்தாலும் அதனால பாதிப்பு வருமானு நீங்க பயப்பட வேண்டிய அவசியமில்லை.
தடை இல்லை.
இந்த மாதிரி மாத்திரை எல்லாம் எடுத்து அழகா ஆரோக்கியமா கொழந்த பெத்துக்கிட்டவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனால இத பத்தி நீங்க பயப்பட வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்றேன். திருமணமாகி நீண்ட வருடங்கள் டிலே பண்ண வேண்டாம். உங்களுக்கு இளமையாய் இருக்கும் பொழுது இந்த கர்ப்பத்தை அடைந்து நீங்க குழந்தை பெத்துக்கறது நல்லது.
https://www.youtube.com/user/TamilMedicalTips
https://maps.app.goo.gl/3tFkHzuKeF9jswxF9