புதிதாக திருமணம் ஆன பையன் புது பெண்ணிடம் இப்பொழுது தாம்பத்யம் வேண்டாம் இன்னும் நான் செட்டில் ஆகவில்லை என்று காரணம் சொல்கிறான், இதற்கு என்ன தான் தீர்வு?
ஒரு செக்ஸ் டாக்டர் என்ற முறையில் இதற்கு என்னுடைய கண்ணோட்டத்தில் பதில் தருகிறேன். இதை ஆண் சொல்வதாக, மணமகள் சொல்வதாக இருந்தாலும் இரண்டுமே ஒரே விதமான பாதிப்பை தான் தருகிறது. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று தமிழில் பழமொழி உண்டு.
காதல் திருமணம் செய்து கொண்ட பல தம்பதியரை நாங்கள் எங்களுடைய கிளினிக்ல் பார்த்திருக்கிறோம். பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தில் நாங்கள் பார்ப்பதை விடவே அதிகமாக இந்த காதல் ஜோடி காமத்தில் கொஞ்சம் குறைவாகத்தான் விளையாடுகிறார்கள்.
அவர்கள் அன்பு என்ற பரிமாற்றத்தை அதிகம் பழகியதால் காதல் மட்டுமே அவர்களுக்கு அதிகமான அனுபவமாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதனால் அது காமமாக மாறுவதில் சிரமம் இருக்கிறது.
திருமண ஜோடிகள் கவனிக்க வேண்டுகிறேன்.
பொதுவான கருத்துக்கு வருவோம்.
இது என்ன இன்னும் லிஸ்ட் பெருசாக இருக்கு.
திருமணமான புதிதில் ஆணுக்கு சுய இன்ப பழக்கம் இருப்பதாலும் வெளிப்படையான இயக்கத்தை அவர்கள் பார்த்ததாலும், போனோகிராபி மூலம் அற்புதமான செயல்பாடுகளை தெரிந்து கொண்டதாலும் ஆண்கள் அதிகபட்சமாக ஞானம் உடையவர்களாகவே இருக்கிறார்கள். பெண்ணுக்கு அந்த அளவுக்கு காம உணர்வில் அறிமுகம் இருப்பதில்லை.
முதல் இரவு முதலே காம உணர்வை செயல்படுத்த ஆரம்பிக்கின்றனர். மனைவியுடன் மிக இணக்கமாக அன்பாக நடந்து கொள்வது சகஜம் ஆகிவிட்டது. பெண்ணுக்கு என்ன பிடிக்கும் என்பதை யூகித்து அவளை திருப்திப்படுத்துவதன் மூலம் தன்னுடைய காம உணர்வுக்கு தீர்வு கண்டுபிடிக்கின்றனர்.
இதனால் இவர்கள் காமக் கலையை கற்று விட்டார்கள் என்று பெருமையும் கொள்கின்றனர்.
அதிகபட்சமான ஆண்கள் தன்னுடைய மனைவியின் உடல் சுகத்தையோ மனதின் ஆசையையோ புரிந்து கொள்வதில்லை. பெண்ணுக்கும் ஆணுடைய இந்த தீவிர காமமும் காதலும் புரியாத ஒன்றாகவே இருந்தாலும் அதை உணர முயற்சிக்கின்றனர்.
பொதுவாக ஆண்களுக்கு விரைந்த விந்து வெளியேற்றம் என்ற ஒரு செயல்பாடு திருமணம் ஆன புதிதில் இருக்கும். அவர்களும் புதியதாக காமக் கலையை கற்கும் பொழுது அது ஒரு பெரிய பிரச்சனையாக அவர்களுக்கு புரியாது. பெண்ணுடைய உடல் சுகத்துக்கு தேவையான உடலுறவு இருக்கிறதா? என்பதை இரு பாலரும் புரிந்து கொள்ளும் முன்னர் அந்த அறுபது நாள் முடிந்து விடும்.
எத்தனை நாட்கள் உடலுறவு முடிந்த பின் பெண் அழுது கொண்டு படுத்திருக்கிறாள் உங்களில் பலர் நினைவு படுத்தி பார்க்கலாம். இன்பம் தெரிந்த சில பெண்கள் கணவன் தூங்கிய பின் மன வருத்தத்துடன் சுய இன்பம் செய்துவிட்டு தூங்குவதும் வழக்கமாகிவிடும்.
நாளடைவில் இதே பழக்கமாகி தன்னுடைய கணவனிடம் வெறுப்புகளை சொல்ல முடியாத காரணத்தால் மனதிலே ஒரு ஏக்கத்துடனே இந்தப் பெண் வாழ்கிறாள்.
இதை நான் ஏன் இப்பொழுது சொல்கிறேன் என்றால் திருமணம் ஆன உடனே காமத்தில் ஈடுபடும் கணவன் மனைவிக்கு இந்த நிலைமை என்றால் ,திருமணம் ஆனவுடன் சில வருடங்கள் குழந்தை பேரு வேண்டாம் என்ற காரணத்துக்காக உடலுறவு தள்ளிப்போடும் கணவனுக்கும் மனைவிக்கும் மேற்சொன்ன பிரச்சனைகள் தெரிய வருடங்கள் பல ஆகிவிடும்.
சாதாரணமாக வாழும் தன்னுடைய துணையுடைய காம உணர்வு பற்றிய கல்வி இல்லாத பொழுது உடலுறவு செய்யாத கணவன் மனைவி எப்படி இதை பழகுவார்கள்?
சமூகத்தின் கேள்விகளுக்கு பயந்து உடனே குழந்தை பேரு வேண்டும் என்று கருத்தரிப்பு மையத்துக்கு செல்வது தான் இவர்களுடைய அடுத்த வேலை.
இதையெல்லாம் பெற்றோர் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் விவரம் தெரியாமலும் இருக்கிறார்கள்.
எல்லாம் படித்த பிள்ளைகள் ஆயிற்றே.
திருமணம் ஆகி ஒரு மாதத்தில் தம்பதியர்கள் உடலுறவு வைக்க முடியவில்லை என்றால் உடனே sex மருத்துவரை பாருங்கள் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
இப்போ பொதுமக்களாகிய நீங்கள் என்ன சொல்றீங்க?
Dr Gomatthi Chinnaswamy
Best sex doctor in Tamil Nadu
Best sex doctor in Tamil Nadu
Erectile dysfunction, Premature ejaculation, Vaginismus clinic
https://gomatthi.com
