Precum- விந்து வரும் முன் வரும் திரவம்
விந்து வருவதற்கு முன் வரும் திரவம்.
இதை ஆங்கிலத்தில் ப்ரீ கம் என்று சொல்லுவார்கள். பல ஆண்களுக்கு இந்த திரவம் பயத்தை உண்டாக்குவதாக இருக்கும். சில ஆண்கள் இந்த திரவம் வெளிப்படும் பொழுது தனக்கு அடிக்கடி விந்து வருவதாக உணர்கிறார்கள் அதற்காக பலவிதமான மருந்துகளை நாடி செல்கின்றனர். அப்படி போகும் பொழுது இவர்கள் தனக்கு அடிக்கடி விந்து வருவதாக மட்டுமே சொல்லுகிறார்கள்.
பகலிலும் தன்னுடைய உள்ளாடையில் இந்த திரவம் படிவதாகவும், தான் மிகவும் பலவீனமாக ஆகுவதாகவும் சொல்லுவார்கள். இதைப் பற்றி தெளிவாக கேட்டு அறிய பல மருத்துவர்கள் முற்படுவது இல்லை. அப்படி இருக்கும் பொழுது அவர்கள் இந்த இதைக் குறைக்க மருத்துவம் செய்வது உண்டு. அதிகபட்சமாக ஆங்கில மருத்துவர்கள் இதை பற்றி பயப்பட வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் மாற்று மருத்துவ முறையில் இதைப் பற்றின ஆராய்ச்சி அதிகம் இல்லாததால் பல ஆண்கள் இந்த மாதிரி மருத்துவ முறைகளை நாடி தன்னுடைய உடலுக்கு அவசியமற்ற மருந்துகளை உட்கொண்டு பல மாதங்களை கழிக்கின்றனர். அவர்களுடைய ஆண்மையைப் பற்றின எந்த ஒரு ஆராய்ச்சியோ டெஸ்ட் செய்யாமல் அவர்கள் தங்களுடைய பயத்தின் காரணமாக மட்டுமே திருமணத்திற்கு முன் தங்களுடைய பிட்னஸ் எப்படி உள்ளது என்று தெரியாமல் திருமணத்தை தள்ளிப் போடுகின்றனர். 35 வயது ஆகியும் திருமணமாகாத பல ஆண்களை நீங்கள் கேட்டால் அதில் 50 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்கள் இந்த மாதிரியான பயத்தால் திருமணத்தை தள்ளிப் போட்டதாக ஒத்துக் கொள்வார்கள்.
நீங்கள் கூட அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம். இதற்கு முறையாக டெஸ்டுகளை செய்து பிரச்சினையை முழுவதுமாக கண்டுபிடித்து அதற்கு தக்க மருத்துவத்தை ஆங்கில மருத்துவ முறையில் பெறுவது நல்லது. பல வருடங்களை திருமணம் இல்லாமல் கழிப்பதும் காப்பாற்றப்படும்.
இந்த வீடியோவை பாருங்கள் இந்த ப்ரீ கம் என்பதை பற்றி சில கருத்துக்கள் பகிர்ந்து உள்ளேன். இதுபோல் இன்னும் வீடியோக்கள் வரும். தொடர்ந்து பாருங்கள்.
