
எங்களுடைய செக்ஸாலஜி கிளினிக் கோவையில் உள்ளது. யோனி இறுக்கம் என்னும் பிரச்சனை பல பெண்களை திருமணம் ஆன உடனே செக்ஸ் உறவில் ஈடுபட முடியாத அளவுக்கு அச்சுறுத்தும் ஒன்றாக மாறிவிடுகிறது. இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு இதை வெளியில் சொல்லவும் பயம், தாங்களாகவே இதை சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் செக்ஸ் உறவில் ஈடுபட முடியாத நிலையில் கழித்து விடுகின்றனர்.
உறவினர்கள் குழந்தை பேரு பற்றி கேட்கும் பொழுது இவர்களுடைய மனம் இந்த உறவுக்காக அவசரப்படுகிறது. இதனாலே பாலியல் உறவு மேலும் சிரமமானதாக மாறுகிறது. பொதுவான மருத்துவர்களுக்கு இந்த யோனி இருக்கும் பற்றின தகவல் முழுமையும் தெரியாத காரணத்தால் இவர்கள் ஊடகங்கள் வழியாக வரும் விளம்பரங்களை பார்த்து பல இடங்களுக்கு சென்று பல மாதங்களை மருத்துவத்தில் செலவு செய்கின்றனர். இந்தப் பிரச்சனைக்கு பெண்ணுடைய யோனி குழாய் இருக்க மற்றும் ஆணுடைய உறுப்பின் விறைப்பு தன்மை குறைபாடு, பாலுறவு பற்றிய முழுமையான அறிவு இல்லாமல் முயற்சி செய்வது, ஆணுறுப்பின் விரைப்பு குறைபாட்டின் காரணமாக பெண் உறுப்பின் நுழைவில் சரியாக கொண்டு செல்ல இயலாமை, யோனி குழாயின் அமைப்பு பற்றி தெரியாததால் யோனி குழாயை சுற்றியுள்ள பகுதியில் ஆணுறுப்பு முட்டி அழுத்தி அங்கே வேதனை கொடுப்பது இப்படி போன்ற பல பிரச்சனைகளால் தம்பதிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது ஒரு சைக்கோ சொமேட்டிக் பிரச்சனை என்ற காரணத்தால் முறையாக விவரம் தெரிந்த செக்ஸ் மருத்துவர் ஒருவரால் உங்களுக்கு விரைவில் தீர்வு தர முடியும். முதலில் முறையான டெஸ்ட் மூலம் ஆண் பெண் இருவருடைய பால் உறுப்பின் தன்மை, செக்ஸ் செய்த வழி முறையில் உள்ள குறைபாடுகள் இவற்றை தீர ஆலோசித்து பின்னர் மருத்துவ முறை முடிவு செய்யப்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை நேரிலே வந்து மருத்துவர் சொன்ன வழிமுறைகளை கடைப்பிடித்து கணவன் மனைவியிடையே ஏற்படும் உடல் மன உறவு காரணமாக பல தம்பதிகள் பெரிய முன்னேற்றத்தை காண்கின்றனர். ஒருமுறை சிகிச்சை வந்தாலே அவர்களுடைய பிரச்சினையை முழுமையாக புரிந்து ஆலோசனை செய்து தர முடியும் என்பதால் இதனால் பலம் அடைந்தவர்கள் பலர்.
உங்களுடைய வீட்டில் இருக்கும் தம்பதிகளோ இல்லை உறவினர்களோ இல்லை பல வருடமாகியும் திருமணத்திற்கு பின் குழந்தை பேரு அடையாமல் இருக்கும் தம்பதிகளுக்கும் கூட இந்த பிரச்சனை இருக்கலாம். இதைப் பார்க்கும் நீங்கள் கூட இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதற்கு முறையான தீர்வு பெற எங்களை போன்ற செக்ஸ் மருத்துவரை ஆலோசித்து மருத்துவம் பெறுவது நல்லது.