
நான் டாக்டர் கோமதி சின்னசாமி.
கோவையில் உள்ளது என்னுடைய பாலியல் மருத்துவமனை. என்னுடைய YouTube பதிவுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் பல பிரச்சனைகளை ஆணுக்குடையதும் பெண்ணுக்குடையதுமாக பல தலைப்புகளில் பேசியிருக்கிறேன். என்னால் இயன்றவரை பொதுவான கருத்துக்களை அங்கே பதிவு செய்துள்ளேன்.
பாலியல் கல்வி பெறவேண்டிய அவசியம் உள்ள மக்களுக்கு ஓரளவுக்கு என்னுடைய வீடியோக்களை பார்க்கும் பொழுது விஷயங்கள் தெளிவாகுது நிச்சயம்.
அடுத்த கட்ட முயற்சியாக இப்பொழுது என்னுடைய வெப்சைட்டில் மேலும் சில வீடியோக்களை போட விரும்புகிறேன்.
அவை பொதுத்தளத்தில் பகிர முடியாதவையாகவும் இருக்கலாம். சில ஒரு சில தலைப்புகளை தீவிரமாக ஆராய்ச்சி செய்வதாகவும் இருக்கலாம். உங்களுடைய அந்தரங்க கேள்விக்கு பதிலாகவும் அமையலாம். இந்த வீடியோக்களை ஆரம்ப கட்டத்தில் சில சாம்பிள் பதிவுகளாக இங்கே வெளியிடுகிறேன். இனி வரப்போகும் வீடியோக்கள் இன்னும் சிறப்பான தலைப்புகளில் அமையும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நன்றி. தொடர்ந்து இந்த பதிவுகளை பாருங்கள். இப்பொழுது வரும் வீடியோக்கள் எல்லாம் இலவச பதிவாகவே வருகின்றன. இவற்றை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். இந்த வெப்சைட்டில் வரும் புதிய தகவல்களை பெற சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.