
விந்தணு கெட்டியாக இருந்தால் விரைவில் கர்ப்பம் ஆகுமா?
விந்து கெட்டியாக இருக்க வேண்டும் என்று முன்காலத்தில் நம்பி வந்தார்கள். விந்து கெட்டியாக இருக்கும் பொழுது விந்தணுக்கள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் என்று மக்கள் நம்பினர். இதனால் கர்ப்பம் எதிர்பார்த்து இருக்கும் தம்பதியினர் அடிக்கடி உறவு வைத்துக் கொள்ளாமல் அதிக இடைவெளி விட்டு வைத்து பழகிவிட்டனர். உடலுறவு அடிக்கடி செய்வது ஆண் நரம்புத்தளர்ச்சியை கொண்டு வரும் என்றும் பலர் நம்புகின்றனர். இதெல்லாம் உண்மையா?
விரைவில் கர்ப்பமாக !
கருத்தரிக்க விரும்பும் தம்பதி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு செய்வது ஆரோக்கியமான விந்தணு உபயோகத்திற்கு வழிவகுக்கும். முன் காலத்தில் இருந்த நம்பிக்கை போல நீண்ட நாட்கள் விந்து வெளிப்படுத்தாமல் இருந்தால் என்ன ஆகும் என்று ஆராய்ச்சி செய்யலாம். உடலில் உற்பத்தியாகும் எந்த திசுவும் அதற்கென்று வாழ்நாள் காலம் உண்டு. விந்தணு இருந்து உற்பத்தியாகி வர 72 நாட்கள் ஆகும். அதற்குப் பின் உடலுறவின்பொழுது வெளிப்பட்டு விந்தனுக்கள் கர்ப்பம் உண்டாகும் அளவுக்கு வீரியமாக செயல்படும். நோ ஃபேப் முறையில் நவீன காலத்தில் ஆண்கள் நீண்ட நாட்கள் இதை வெளிப்படுத்தாமல் தன்னுடைய காம உணர்வை கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இது உறுப்பை பலமாக்க உதவும் என்று நம்புகின்றனர். Nofap முறையால் பல ஆண்களுக்கு விந்து கெட்டிப்பட்டு அடுத்த முறை அது வெளிப்படும் பொழுது நிறத்தில் ரத்தம் கலந்த வெளிப்பாடாக மாறுகிறது. சிலருக்கு இதனால் பிராஸ்டேட் சுரப்பியிலும் வலி, தொற்று உண்டாகிறது.
இந்த குறைபாடுகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தன்னுடைய பால் உறுப்பை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக ஒரு செக்ஸ் மருத்துவரை 20 வயது முதலே ஆலோசிப்பது நல்லது.
எந்த பிரச்சனைக்கும் சிறப்பு மருத்துவ ஆலோசனை விரைவில் உதவும்.
பெண், ஆண் இருவருடைய பாலியல் பிரச்சனைகளை நம்முடைய கிளினிக்கில் நேரில் வந்து ஆலோசித்து முழுமையாக தீர்வு பெறலாம்.